Kathambari Novels
காலா பாணி
2027-ஆம் ஆண்டு, கடுமையான ஒரு தொற்றுநோய் பரவுவதால் அந்தமான், நிக்கோபார் தீவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தீவுகளில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த நோய்த்தொற்றின் தாக்கத்தையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் மனநிலைகளையும், அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று கதை செல்லும்.
பசி, உயிர் வாழவேண்டும் என்ற சூழல் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யச் செய்யும்… துரோகம், கருணை, காதல், இழப்பு, பழங்குடியினர், அதிகாரிகள், மருத்துவர்கள், வசதி உள்ளவர்கள் என்று பல கோணங்களில் எடுக்கப்பட்டிருக்கும் சர்வைவல் திரில்லர் வெப் சீரிஸ் இது.
நிறைய கதாபாத்திரங்கள். பெண் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் அருமை. ஒவ்வொரு எபிசோட் ஆரம்பம், அதை எந்த எபிசோட் முடிவோடு இணைக்கிற விதம் தெளிவாக இருக்கும்.
தளம்: Netflix

