Kathambari Novels
கிரிமினல் ஜஸ்டிஸ்(சீசன் 4)
அஸ்பெர்கர் சிண்ட்ரோம்(Asperger’s syndrome)-ஆல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை, அவளுடைய பெற்றோரின் மன அழுத்தங்கள், அவளைப் பார்த்துக்கொள்ள வரும் செவிலியரின் கொலை, அதற்குப் பிறகு மாதவ் மிஸ்ரா தலைமையிலான சட்டப் போராட்டம் – இதை எல்லாம் மையமாகக் கொண்டு நகரும் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இணையத் தொடர்.
எப்போதும் கொலை மையமாக இருக்கும் திரில்லர் கதைகள் “நல்லவங்க vs கெட்டவங்க” மாதிரி முடிவுக்கு வரும். இந்தக் கதையில அப்படி இல்ல. ஆனா அப்படி முடிச்சதால குறையாவும் தெரியலை. நிறைய இடங்களில் டயலாக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. குறிப்பாக கடைசி எபிசோட்ல வரும்: “இந்த உலகத்துக்கு உண்மைய சொல்லக் கூடாது… காட்டணும்.”
கொஞ்சம் வித்தியாசமான த்ரில்லர் வெப் சீரிஸ்!
தளம்: ஜியோ ஹாட்ஸ்டார்

