நாமா… முகமூடியா??
உண்மையின் மறுபக்கம்
வாய்மையா?? பொய்மையா??
வினாக்களின் மறுபக்கம்
விடைகளா?? சமாளிப்புகளா??
பணத்தின் மறுபக்கம்
தேவையா?? தற்பெருமையா??
முகவரியின் மறுபக்கம்
அடையாளமா?? ஆடம்பரமா??
இருளின் மறுபக்கம்
இரவா?? இருட்டடிப்பா??
வெற்றியின் மறுபக்கம்
தோல்வியா?? சிபாரிசா??
அமைதியின் மறுபக்கம்
தன்னடக்கமா?? தன்னிறக்கமா??
புகழின் மறுபக்கம்
உழைப்பா?? உதவிகளா??
ஆதுபோல…
நம்மின் மறுபக்கம்
நாமா?? முகமூடிகளா??