Kathambari Novels
சில இல்லைகள்
தேனின்
தித்திப்பை
தோற்கடிக்கும்
தீஞ்சுவை
…இல்லை…
மழைக்கு
மயங்கிடாத
மானிட
மனங்கள்
…இல்லை…
அண்டத்திற்கு
அப்பாலுள்ள
அதிசயங்கள்
அறிந்தவர்
…இல்லை…
வயதை
வசப்படுத்தும்
வித்தைகள்
வாழ்பவனிடம்
…இல்லை…
காலத்தை
கட்டிப்போடும்
கடிவாளம்
கடவுளுக்கும்
…இல்லை…
அதுபோல்…
நம்மை
எடைபோடும்
எடைகற்கள்
பிறரிடத்து
…இல்லை…

