tear, sad, crying, cry, pain, depressed, depression, alone, crying, crying, crying, crying, crying, cry

Kathambari Novels


பிரிவின் துளி


வலி உணர்த்தும்
வான் மேகம்
பிரிந்து வருகின்ற முதல்
மழைத்துளி…

அழகு உணர்த்தும்
ஆதரவில்லா
சன்னல் கம்பியின் ஒற்றை
நீர்த்துளி…

உண்மை உணர்த்தும்
உறுதி கொண்டு
உழைப்பவனின் நெற்றி வழியும்
வியர்வைத்துளி…

தேவை உணர்த்தும்
தணல் பூமியில்
தாகம் தணிக்கும் கடைசி
தண்ணீர் துளி…

வாஞ்சை உணர்த்தும்
பச்சைப்புல்
பிரியமறுக்கும் பகலவன் கண்ட பனித்துளி…

இவையாவும் ஒருங்கே உணர்த்தும், அவன்
கன்னம் வழிந்தோட துடிக்கும்
கண்ணோரக் கண்ணீர் துளி…
அவளின்
சூழ்நிலை காதல் மறுப்பின்
வெளிப்பாடாய்!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top