Kathambari Novels
காதலின் கதி என்ன??
வண்ணம் நீங்கினால் வண்ணத்துப்
பூச்சியின் பெயர் என்ன?
கனவுகளைப் பிரித்து விட்டால்
தூக்கத்தின் துணை என்ன?
தோல்விகள் இல்லா விட்டால்
வெற்றியின் ருசி என்ன?
சிப்பிகள் மூடாவிட்டால்
முத்துகளின் மதிப்பு என்ன?
இருளினை நீக்கி விட்டால்
இரவின் பொருள் என்ன?
வெண்மையை இழந்து விட்டால்
பாலின் நிறம் என்ன?
நட்சத்திரங்கள் வீழ்ந்து விட்டால்
வானின் அழகு என்ன?
நம்மை நீங்கி விட்டால்
காதலின் கதிதான் என்ன??

