கவிதைகள்

Kathambari Novels சில இல்லைகள் தேனின்தித்திப்பைதோற்கடிக்கும்தீஞ்சுவை…இல்லை… மழைக்குமயங்கிடாதமானிடமனங்கள்…இல்லை… அண்டத்திற்குஅப்பாலுள்ளஅதிசயங்கள்அறிந்தவர்…இல்லை… வயதைவசப்படுத்தும்வித்தைகள்வாழ்பவனிடம்…இல்லை… காலத்தைகட்டிப்போடும்கடிவாளம்கடவுளுக்கும்…இல்லை… அதுபோல்…நம்மைஎடைபோடும்எடைகற்கள்பிறரிடத்து…இல்லை…

சில இல்லைகள்(கவிதை) Read More »

Kathambari Novels அவள் தோற்கிறாள் கார்குழல் பின்னல் பிடித்தடைத்த‘சடைமாட்டி’ நெற்றி வியர்வையில் வழிந்தோடும்‘சாந்து பொட்டு’ அதரத்தில் சாயம் கொடுக்கும்‘பஞ்சு மிட்டாய்’ கழுத்து சங்கிலியில் பிடித்து ஆடும்‘அன்னபட்சி பதக்கம்’ விரல் பத்தை தழுவி நிற்கும்‘மருதாணி’ கை இரண்டிலும் திருவிழாவின்‘கண்ணாடி வளையல்கள்’ இடுப்பு வளைவில் எடுத்து சொருகிய‘தாவணி முந்தானை’ இவையாவும்அழகாகின அவளிடம்! என் பார்வை உணர்ந்துநெருங்கி வந்து‘என்ன வேணும்? சொல்லு மாமா’என்றாள்! மண் மணம் மாறாத பேச்சில்அவள் பேரழகியாகி நின்றாள்தமிழிடம்!! ‘இக்கணத்தில்உன்னழகு தோற்றதடி – என்தாய் மொழி இடத்து’என்றேன்! மறுப்பு

அவள் தோற்கிறாள் Read More »

Kathambari Novels வீடு சலிப்புத் தட்டுகிறது கனவென்ன கண்டோமெனஎழாமல்உணவென்ன செய்யவெனஎழுவதிலேசுணக்கம் வந்துஅதிகாலை அழுதுவடிகிறது! வட்டமாய் மெல்லிசாய்முறுகலாய்நாள்தோறும் சுடப்படும்தோசையின்விட்டத்தில் கால்கடுக்கமுகவாட்டம் நிற்கிறது! சிறுகுன்று உயரத்திற்குகழுவிகவிழ்த்திய பாத்திரங்களின்பளபளப்பில்விழுகின்ற பிம்பத்தினைசோர்வு ஆட்கொள்கிறது! குறைகள் சொல்லிவிடமுடியாதபடிபெருக்கி துடைக்கப்பட்டதரையின்நிறைவுகளில் சிந்தனைகள்சிறைபிடிப்பை உணர்கிறது! துவைத்து இஸ்திரிசெய்துமடித்து வைக்கப்பட்டதுணிகளின்நேர்த்திகளுக்குள் ஒருவிதவிரக்தி ஒளிந்திருக்கிறது! இதுவே இல்லத்தரசியின்பொறுப்பென்றுஆறுதல் கொண்டாலும்அடிமனதின்மறுப்பு பதியப்படாமலேஅந்தநாள் முடிகிறது! கூடவே நாளையும்இதுபோன்ற இன்னொருநாளே என்பதில்வீடு சலிப்புத்தட்டுகிறது!!

வீடு சலிப்புத் தட்டுகிறது Read More »

Kathambari Novels புயலிடம் ஒரு புலம்பல் அதிரும் வானமே! அமைதி குலைந்த ஆழியே! சுழன்று அடிக்கும் ஓதமே! இருளை அப்பி இருக்கும் இருளே ஆவேச காற்றே! அடங்கா மழையே! கட்டுமர மெடுத்து கடல் சென்ற காதலன் இன்னும் கரைக்கு வந்து சேரலையே! ஓங்கிச் சீறும் அலையால் திரும்பிட சிரமமா? திசைமாறி சிக்கலா? உரகடலில் அன்பன் உயிர்நிலை தெரியா உள்ளம் கவலில் உழலுதே! கெடுதல் அண்டுமோ வென அஞ்சியே, துயரலை அடித்து, உயிரதில் அமிழ்ந்து கரையுதே! மீன் உணக்கையில்

புயலிடம் ஒரு புலம்பல் Read More »

Kathambari Novels அழுக்கான அர்த்தங்கள் அழகு என்பதுஅறம் சார்ந்தது என்றில்லாமல்நிறம் சார்ந்தது என்றானது… வாய்மை என்பதுவாழும் வாழ்க்கை என்றில்லாமல்வெற்று வார்த்தை என்றானது… உதவி என்பதுபிறருக்கான நன்மை என்றில்லாமல்நமக்கான விளம்பரம் என்றானது… எளிமை என்பதுஎடுத்துக்காட்டு என்றில்லாமல்ஏய்க்கப்பட என்றானது… மரியாதை என்பதுஉன்னத உள்ளத்திற்கு என்றில்லாமல்உடுத்தும் உடைக்கு என்றானது… ஏமாற்றுதல் என்பதுசமூகத்தின் அவலம் என்றில்லாமல்சாமர்த்தியத்தின் அளவீடு என்றானது… சம்பாத்தியம் என்பதுசராசரி விடயம் என்றில்லாமல்சந்தோஷத்தின் அவசியம் என்றானது… அவ்விதம்அடுக்கிக் கொண்டே போகின்றது,அன்றாட வாழ்வில்அழுக்கான அர்த்தங்கள்!!!

அழுக்கான அர்த்தங்கள் Read More »

Kathambari Novels காதலின் கதி என்ன?? வண்ணம் நீங்கினால் வண்ணத்துப்பூச்சியின் பெயர் என்ன? கனவுகளைப் பிரித்து விட்டால்தூக்கத்தின் துணை என்ன? தோல்விகள் இல்லா விட்டால்வெற்றியின் ருசி என்ன? சிப்பிகள் மூடாவிட்டால்முத்துகளின் மதிப்பு என்ன? இருளினை நீக்கி விட்டால்இரவின் பொருள் என்ன? வெண்மையை இழந்து விட்டால்பாலின் நிறம் என்ன? நட்சத்திரங்கள் வீழ்ந்து விட்டால்வானின் அழகு என்ன? நம்மை நீங்கி விட்டால்காதலின் கதிதான் என்ன??

காதலின் கதி என்ன? Read More »

Scroll to Top