Kathambari Novels
ரோந்த்(Ronth)
இது வழக்கமான போலீஸ் த்ரில்லர் அல்ல. திருப்பங்கள் கிடையாது. அதிரடிக் காட்சிகள் இருக்காது. இரவு நேர போலீஸ் ரோந்து பணியின் ஒரு பயணம். அனுபவம் நிறைத்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மனைவியை அவர் பார்த்துக் கொள்ளும் விதம் என்று ஒரு பக்கம். அனுபவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் இளைய கான்ஸ்டபிள், அவன் தனிப்பட்ட வாழ்வில் இருக்கும் நெருக்கடிகள் என்று மற்றொரு பக்கம்.
இருவரும் ரோந்து செல்கிறார்கள். நீண்ட இரவில் இவர்களது உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளும் மௌனங்கள் மற்றும் வாதங்கள் என்று படம் பயணிக்கிறது. பெரிய, முக்கிய வழக்குகள் என்றில்லாமல், காவலர்களின் இரவு ரோந்துப் பணியில்… வீட்டுச் சண்டைகள், காணாமல் போனவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று வரும் புகார்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்று இயல்பாக இருக்கிறது காட்சிகள்.
முடிவில் ஏதோ ஒரு கனம், ஏதோ ஒரு கோபம் மனதில் வந்து உட்கார்ந்துவிடுகிறது.
தளம் : ஜியோ ஹாட்ஸ்டார்

