Kathambari Novels
தாரா மீண்டும் மீண்டும் தேவாவிற்கு அழைக்க முயற்சித்தும், தோல்வியிலே முடிந்தது அது. என்ன செய்ய? யாரிடம் கேட்க? என்ற கேள்வி வருகையில் பாபி ஞாபகம் வந்தது. உடனே அவனை அலைபேசியில் அழைத்தாள்.
அழைப்பை ஏற்றவுடன், “ஹலோ பாபி… ஒரு…” என்று அவசரமாக சொல்லும் முன், “ஹாய் தாரா, எப்படி இருக்கீங்க?” என்றான்.
“ஆங் பாபி… தேவா ஃபோன் பண்ணாங்களா?” என்று பதற்றம் நிறைந்த பதில் கேள்வி கேட்டாள்.
“என்னாச்சு தாரா? இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க”
“அது… தேவா ஃபோன் பண்ணாங்களா?” என்றாள், அவன் என்ன பேசுகிறான் என்றே கவனிக்காமல்!
“நேத்து பண்ணான். ரெண்டு நாள் எங்கயோ போறதா சொன்னான்”
“இல்லை. நான் அத கேட்கல. அதுக்கு அப்புறமா ஏதாவது?” என்றவள் குரல் நடுங்க ஆரம்பித்தது.
“என்னாச்சு? ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க?”
“இன்னைக்கு எனக்கு நிறைய டைம் கால் பண்ணிருக்காங்க. ஆனா மிஸ் பண்ணிட்டேன். இப்போ திரும்ப கால் பண்ணா… நாட் ரீச்சபிள்னு வருது”
“பயப்பிடாதீங்க. ஏதாவது ஜாப் ரிலேட்டடா போயிருப்பான்”
“அவங்க அக்காக்கு தெரியுமா? இல்ல பாஸ்கர் கபிள்ஸ்…” – எதிரில் இருப்பவன் என்ன பேசுகிறான் என்று கருத்தில் கொள்ளாமல் கேள்வி கேட்டாள்.
“நான் கேட்டுச் சொல்றேன்”
“ம்ம், கொஞ்சம் பாஸ்ட்டா. என்னால… எனக்கு பயமா இருக்கு”
“டோன்ட் வொரி. நான் பார்க்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
அந்த அழைப்பு முடிந்ததும் மீண்டும் தேவாவிற்கு அழைத்துப் பார்த்தாள்.
எந்த பலனுமில்லை! பதினைந்து நிமிடங்கள் கழித்து, பாபி பெயர் தாராவின் அலைபேசித் திரையில் வந்தது. பட்டென எடுத்தாள். “சொல்லுங்க பாபி”
“அவங்களுக்கும் எதும் தெரியல. ஆனா பாஸ்கர் அங்கிள் ஆன்ட்டி ஃபோனும் ரீச் ஆகலை. மூணு பேரும் எதும் வொர்க் ரிலேட்டடா போயிருப்பாங்க”
“ஓ!” என்றவள் ஒருதுளி கண்ணீர் சிந்தினாள்.
“சாருகிட்ட கொடுக்கிறேன். கொஞ்சம் நேரம் பேசுங்க” என்று அருகிலிருந்த சாருவிடம், அலைபேசியைக் கொடுத்தான்.
“என்னாச்சு தாரா?”
“ஏன் சாரு இவன் இப்படிப் பண்ணறான்” என்று அழ ஆரம்பித்தாள்.
“இப்ப என்னாச்சு? ஜஸ்ட் ஃபோன் அட்டன் பண்ணலை. அதுக்கு எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற?”
“உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. நான் ஃபோன் வைக்கிறேன்”
“தாரா கொஞ்சம் நேரம் என்கிட்ட பேசு. சரியாயிடுவ”
“இப்போ வேண்டாம் சாரு. என்னவோ பயமா இருக்கு”
“பயப்பிடாம இரு. நாளைக்கு, பாபியை தேவா ஆஃபிஸ்ல கேட்டுப் பார்க்கச் சொல்றேன். பயப்படமா தூங்கு தாரா”
“ம்ம்ம்” என்று அழைப்பைத் துண்டித்தாள். கண்கள் நிறைந்து கண்ணீர் கன்னங்கள் மேல் வழிந்தோடியது. மீண்டும் ஒருமுறை தேவா அலைபேசி எண்ணிற்கு முயற்சித்துப் பார்த்தாள். எந்த முன்னேற்றமும் இல்லை.
அழுதாள். மீண்டும் முயற்சித்தாள். அடுத்து அழுதாள். திரும்பத் திரும்ப இது நடந்தது. நேரம் சென்று கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கையில் அப்படியே அலைபேசியை வைத்தபடியே உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல் தாரா எழுந்தாள். யாரிடமும் இன்னலை சொல்லி இதயத்தை இளைப்பாற்ற முடியாது. எனவே தனக்குத் தானே நம்பிக்கைக்கு கொடுத்துக் கொண்டாள்.
மருத்துவமனை சென்றாள். பணி புரிந்தாள். வீட்டிற்கு வந்தாள். கிடைக்கும் நேரத்தில் அலைபேசியை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள். தேவாவை அழைத்துப் பார்ப்பாள். குருஞ்செய்தி அனுப்புவாள்.
‘முடிவு எடுக்கிறேன் என்றானே? என்ன முடிவு எடுத்திருப்பான்??’ என்று வேறு மனம் குழம்பியது. ஒவ்வொரு நாளும் இதே நடந்தது.
பாபி, தேவாவின் அலுவலகத்தில் கேட்டுச் சொன்ன தகவல்… தேவா ஒரு ஆறு நாட்கள் விடுமுறை விண்ணப்பத்திருந்தான் என்று. அது ஒரு நிம்மதி! ஆனால், எங்கு இருக்கிறான் என்று தெரிய காதல் மனம் ஆசைப்பட்டது.
ஒவ்வொரு நாளாக கடந்து செல்லச் செல்ல, இதுபோல்தான் தன் அம்மாவும் கஷ்டப்பட்டிருப்பார்களோ என்று யோசித்தாள். அம்மா நிலைமை புரிந்தது! அவ்வளவுதான்!!
ஆனால், அதற்காகவெல்லாம் தன் காதலைக் கை விடமுடியாது. காதலன் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டும். அதுதான் என் காதல்!
வாழ்க்கைகான அம்மாவின் வரையறைகள் வேறு! தன் வரையறைகள் வேறு அல்லவா?? இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டாள்.
இந்த புரிதல்கள், எண்ணங்கள், வலிகள், வேதனைகள் என்று ஒவ்வொன்றாய் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக தேவா மேல் கோபமாக வளர்ந்து நின்றது.
பல சமயங்களில் அவன் அழைத்தால் திட்டித் தீர்த்துவிட வேண்டுமென்று ஒரு கோபம் வரும். சில சமயம் அவன் அழைத்தாலே போதுமென தோன்றும். ஆக மொத்தத்தில் தேவாவை நினைத்து நினைத்து… தாரா தன்னை நிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஏழு நாட்களுக்குப் பின், என்றைக்கும் போல் இன்றும் மருத்துவமனையில் இருந்து வந்தாள். இரவு உணவை முடித்தாள். தன் அறைக்கு வந்தாள். இரவு உடைக்கு மாறிக் கொண்டாள்.
அலைபேசியை எடுத்து தேவாவிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள். எந்தவித மாற்றமும் இல்லை. அதே தொடர்பு எல்லைக்கு அப்பால் என்ற செய்தியே!
தலையணையில் முகம் பதித்து, முசுமுசுவென சற்றுநேரம் அழுதுவிட்டு, உறங்கிவிட்டாள்.
இரவு ஒன்றே முக்கால் மணி. அலைபேசி ஒலி, அவள் தூக்கத்தைக் கலைத்தது.படுத்திருந்தபடியே எடுத்துப் பார்த்தாள்.திரையில் தேவா பெயர்.சட்டெனஎழுந்துவிட்டாள்!
தேவாவா? இல்லை, வேறு யாருமா? என்றொரு பயம், பதற்றம் வந்தது. அந்தப் பயத்துடனே அழைப்பை ஏற்றாள். மெதுவாக அலைபேசியைக் காதிற்குக் கொடுத்தாள்.
“ஹலோ” என்றாள் உயிர் வடிந்துவிட்ட குரலில்.
“ஹாய் தாரா” என்ற தேவா குரல் முழுதும் குதூகலம் கொட்டிக் கிடந்தது.
இத்தனை நாள் எப்படி வேதனையில் உழன்று கொண்டிருந்தோம், இப்படி இவன் உற்சாகமாக இருக்கிறானே என்று கோபம் வந்தது தாராவிற்கு!
“ஹே தாரா. என்ன பேச மாட்டிக்கிறீங்க?” என்றான்.
“டோன்ட் யூ ஹேவ் அ பிரைன்?” என்றாள் அழுத்தமாக, அடிக்குரலில்!
மறுமுனையில் தேவா : தன்னை சுற்றி நிற்பவர்கள் காதில் விழுந்திருக்குமோ என்றொரு பார்வைப் பார்த்தான்! பின்னர் அவர்களிடமிருந்து சற்றுத் தள்ளி வந்து, “தாரா, நான் தேவா பேசறேன்” என்றான்.
“டோன்ட் யு ஹேவ் அ பிரைன்?” என்று மீண்டும் குரல் உயர்த்தினாள்.
தேவா எப்படி உணர்கிறான் என்று அவன்தான் சொல்ல வேண்டும்! அருகில் யாருமில்லை என்றொரு ஆறுதல் இருந்ததால், “தாரா… என்ன சொல்றீங்க? சரியா கேட்கலை” என்றான்.
“சரியாதான் கேட்டிருக்கு. இருந்தாலும் கேட்கிறேன்… டோன்ட் யூ ஹேவ் அ பிரைன்”
“என் மேல கோபமா?” என்றான், உடனே அவள் நிலை உணர்ந்து!
“எங்க போறேன்னு சொல்லிட்டு போக முடியாதா?” என்றாள் உக்கிரமாக!
“தாரா”
“உயிரே போயிருச்சித் தெரியுமா” என்று உச்சரித்து உடைந்துவிட்டாள்.
“தாரா… தாரா”
அவள் அழுகையின் குரல் மட்டுமே கேட்டது. அருகில் இருந்தாலாவது ஆறுதல் கூறலாம். இப்போது என்ன செய்ய முடியும் என்று அரற்றினான்! “தாரா ப்ளீஸ் அழாதீங்க” என்றான்.
“ஒரு ஃபோன் பண்ண முடியாதா தேவா?” – அழுகையின் ஊடே குரல் வந்தது.
“தாரா… நான் ஃபோன்…”
“பேச வேண்டாம் தேவா. நீங்க பேசவே வேண்டாம்!!”
“தாரா ப்ளீஸ்! “
“சேஃப்தான??”
“ஃபர்ஸ்ட் அழாதீங்க”
“ஐ ஹோப் யூ ஆர் டூயிங் வெல்! ரைட்?”
“எஸ்… பட்…”
“சந்தோஷம். ஃபோன வச்சிடறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள். மீண்டும் தலையணையில் விழுந்தாள். அவனிடம் பேசியாயிற்று! கோபமும் கொண்டாயிற்று!
அழுகை மட்டும் நிற்பதற்கான அறிகுறியே இல்லை! ஏங்கி ஏங்கி அழுதாள்! ஐந்து நிமிடத்திற்குப் பின்தான் அழுகை நின்றது. எழுந்து அமர்ந்து, அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.
“ஹலோ” என்றான், ஒரு நொடி முடியும் முன் அழைப்பை ஏற்று!
“ஹலோ தேவா” என்றாள் எப்போதும் போல்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கதான் பேசினீங்களா? நான் வேற யாரோனு நினைச்சிட்டேன்”
“ஸாரி தேவா” என்று அழுதாள்.
“நான் சும்மாதான் சொன்னேன். ஃபர்ஸ்ட் அழறதை நிறுத்துங்க”
“ம்ம்ம்”
“கண்ண நல்லா துடைச்சிக்கோங்க”
“ம்ம்” என புறங்கைகளால் கன்னங்களிலிருந்த கண்ணீரைத் துடைத்தாள்.
“இனிமே அழக்கூடாது”
“ம்ம்ம்! அகைன் ஸாரி தேவா”
“இப்படியா ஸாரி கேட்ப்பீங்க” என்றான் அவளை இலகுவாக்கும் முயற்சியாய்!
“டஸன் டைம்ஸ் ஸாரி”
“ம்ம், இது நல்லா இருக்கு” என்றதும், அவன் தன்னிடம் பேசும் முறையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல் தெரிந்தது தாராவிற்கு!
அவள் யோசிக்கும் முன், “உங்ககிட்ட சொல்லாம போனதுக்காக நானும் ஸாரி கேட்டுக்கறேன்” என்றான்.
“ஸாரி மட்டும் போதாது தேவா! பெனால்டி இருக்கு”
“எங்க போலாம்னு சொல்லுங்க. கூட்டிட்டுப் போறேன்”
“இப்போ எதுவும் தோணலை. எப்போ தோணுதோ அப்போ சொல்றேன்”
“ஏன் தோணலை?”
“ஏழு நாளா, உங்களைப் பார்க்கலயா… ஸோ மைன்ட்… ஒருமாதிரி… ஐ வாஸ்… ஐ… ஸோ… எனக்கு எப்படிச் சொல்லனு தெரியல” என்று குழம்பினாள்.
“நீங்க சொல்லைனாலும், எனக்குப் புரியும் தாரா” என்றான்.
சட்டென்று, “நான் தேவாவை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றாள், குரலில் எண்ணிலடங்கா ஏக்கங்கள் காட்டி!
“ம்ம், இப்போதான் உங்க மெசேஜ், மிஸ்ட் கால்ஸ் பார்த்தேன். எனக்கு புரியுது”
“அதைப் பார்த்தப்புறமாதான் ஃபோன் பண்ணீங்களா?”
“ச்சே ச்சே அதைப் பார்க்கலைனாலும் ஃபோன் பண்ணியிருப்பேன்”
“ஒன்னு சொல்லணும்னு தோணுது தேவா! டு யூ மைன்ட்?”
“நோ, ஐ டோன்ட் மைன்ட்”
“ஐ ரியலி வாண்ட் டு ஹக் யூ ரைட் நவ்” என்றவள் குரலில், அளவுகோல் வைத்து அளவிட முடியா ஆசை!
அவள் ஆசையை, ரசித்து ருசித்து அசைபோடும் மௌனம் அவனிடம்!
“தேவா… இப்படிச் சொன்னதுக்காக நீங்க என்னைய தப்பா நினைச்சாலும், ஐ டோன்ட் மைன்ட்”
“நான் தப்பா நினைப்பேன்னு சொன்னேனா?”
சட்டென தாராவிற்குத் தோன்றியது, ‘இவனுக்கு என்னாச்சு?’ என்றுதான்.
“தாரா”
“ம்ம்ம், எங்க போயிருந்தீங்க?”
“அன்னைக்கே சொன்னேனே. லேன்ட் இஸ்யூ… பிள்ளைங்க படிப்பு”
“பட் ஃபோன் ஏன் அட்டன் பண்ணலை?”
“இது டிரைபள் ஏரியா மக்கள் பிரச்சனை! நான் இருக்கிறது ஃபாரெஸ்ட் ஏரியா. அதான் சிக்னல் ப்ராப்ளம்”
“ஓ”
“ஸடன் பிளான். ஃபோன் பண்ணி உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணலாம்னு நினைச்சேன். பட், முடியலை”
“மெசேஜ் அனுப்பிருக்கலாமே”
“அனுப்பினேன். பட் டெலிவர் ஆகலை போல”
“எப்போ ரிட்டர்ன்”
“நாளைக்கு மத்தியானம் சென்னை. ஈவினிங் மீட் பண்ணலாம். சரியா?”
“இப்போவே பார்க்கணும்”
“முடிஞ்சா, சீக்கிரமா மீட் பண்ண ட்ரை பண்றேன்”
“இப்பவே தேவாவைப் பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.
மறுமுனையில் : தேவா பேசிக் கொண்டிருக்கும் போது, மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர் அழைத்தார்கள். அவன் காதில் அவர்கள் குரல் விழவேயில்லை.
உடனே, “தேவா கம்ப்ளீட்டா பிளாட் ஆயிட்டான். கரெக்டா??” என்றார் மிஸ்டர் பாஸ்கர்.
“எஸ் பாஸ்கர், யூ ஆர் கரெக்ட். உங்களைப் போல” என்று சிரித்தார் மிஸஸ் பாஸ்கர். “கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டும்” என்று சிரித்துப் பேசிக் கொண்டே சென்றார்கள்.
மீண்டும் அலைபேசி அலைவரிசையில்,
தாரா, ‘இப்போவே பார்க்க வேண்டும்’ என்று சொல்ல, தேவா ‘நாளை’ என்று சமாதானம் செய்து கொண்டிருந்தான். கடைசியாக அவள், “இப்பவே” என்று சொல்லும் போதே அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
‘ஏன் கட் பண்ணான்? லிமிட் கிராஸ் பண்ணிட்டேனா?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். திடீரென்று தாரா அறையின் இருளைக் கிழிக்கும் ஒளி, அவள் அலைபேசியிலிருந்து வந்தது. அலைபேசி திரையில் அன்பிற்குரியவன் பெயர். இம்முறை வீடியோ கால் செய்திருந்தான். அழைப்பை ஏற்றாள்.
“போதுமா, பார்த்தாச்சா?” என்றான் எடுத்தவுடனே.
“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.
“ரொம்ப அடம்பிடிப்பீங்களா”
“அப்படியெல்லாம் இல்லை”
“சரி விடுங்க! நானும் தாராவைப் பார்க்கணும். லைட் ஆன் பண்ணுங்க”
“ஒன் மினிட்” என்று இரவு விளக்கை ஒளிர ச் செய்து, “இப்ப தெரியுதா?” என்று கேட்டவளைப் பார்த்த தேவா, ஒரு நிமிடம் இமைக்க மறந்தான். அழுது அழுது ஈரமான விழிகள்! அதிலும் அந்த நனைந்த இமைகள்!!
சற்று நேரத்திற்கு முன் அவள் சொன்ன ஆசையைச் செய்ய வேண்டும் போல் ஆழமான ஆவல் அவனிடம்! அதாவது, அவளைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டான்.
“தேவா” என்று இரண்டு மூன்று முறை தாரா அழைத்த பின்னரே, அவன் அந்த நொடிக்கு வந்தான்.
“ஒரு நிமிசம்” என்றவள் மெத்தையிலிருந்து இறங்கி, அறையின் கண்ணாடி கதவைத் திறந்து, பால்கனி வந்து, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
சற்று தூரத்தில் நீலக்கடல்! இருளுக்குள் இரைச்சலை வாரி இறைத்தன கடல் அலைகள்! இதயத்தினுள் இன்னிசை வடிக்க இருவரின் காதல் பேச்சுகள், ஆரம்பமாயின!!
“வெளிய வந்தாச்சா? பின்னாடி கடலா?”
“ம் ஆமா, பால்கனில நிக்கிறேன். கடல் காத்து நல்லா இருக்கும். உங்களுக்குப் பின்னாடி என்ன இருக்கு?”
“பாரஸ்ட் ஏரியாதான! ஸோ நிறைய மரம்… செடி கொடி…”
“வாவ்”
“என்ன வாவ்? நிறைய கொசுக் கடி”
சிரித்தவள், “நாளைக்கு மீட்டிங் எதுக்காக? சும்மா பேசறதுக்கா?” என்றாள்.
“இல்லை! ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”
“என்ன விஷயம்?”
“நாளைக்கு நேரா பார்க்கிறப்போ சொல்றேனே”
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! என்ன சொல்ல போகிறான் என்பதை, அவன் பேசும் முறையை வைத்து எளிதாகக் கணிக்க முடிந்தது! இருந்தும் அவனிடம் விளையாட ஆரம்பித்தாள். காதல் விளையாட்டு!!
“உங்க முடிவாங்க?” என்றாள்.
“ஆமாங்க”
“அப்ப த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் சாங் பிடிச்சிருச்சாங்க?”
“இல்லைங்க! பிடிக்கவே இல்லைங்க”
“உங்க லவ்வரை நினைச்சுக்கிட்டு கேளுங்க! பிடிக்கும்”
“அப்படியும் கேட்டுப் பார்த்துட்டேன்ங்க. சாங் பிடிக்கலை. ஆனா பாருங்க! அவங்களைப் பிடிச்சுப் போயிருச்சு”
எத்தனை முறைதான் ‘பிடிக்கும்’ என்ற வார்த்தைக்குள் காதலை மறைத்து வைப்பாய் என்று தேவாவை அடிக்க வேண்டும் போலிருந்தது தாராவிற்கு!
இன்னும் விளையாட வேண்டும் என்று நினைத்தவள், “அப்புறம் நாளைக்கு ஈவினிங் எங்கங்க மீட்டிங்? ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டாங்க??” என்றாள்.
“வேண்டாம்! அதுக்கு எனக்கும் ஒத்து வராதுங்க”
“அப்புறம் எங்கங்க?”
“ஏதாவது கேஃபே?!”
“ரெட் ஹார்ட் பலூன்ஸ் உண்டாங்க?”
“இல்லைங்க. என் பட்ஜெட்ல வராது! ஸோ அதெல்லாம் எதிர் பார்க்காதீங்க”
“அந்த சீரியல் லைட்ஸ்ங்க”
“அதான் கஃபேயில லைட் இருக்கும்ல அப்புறம் எதுக்குங்க?”
“அட்லீஸ்ட் ஒரு கேக்”
“காஃபி ஷாப்ல காஃபி குடிப்போம்… எதுக்குங்க கேக்?” என்கையில், அவனும் விளையாட ஆரம்பித்து விட்டான்! அதே காதல் விளையாட்டு!!
“தேவா”
“ம்ம்ம்”
“உங்களுக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணேன் தெரியுமா?” என மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நின்றாள்.
“அந்த ஹிஸ்டரியைத்தான் என் கால் ஹிஸ்டரி சொல்லுதே”
“மெசேஜ் டைப் பண்ணி பண்ணி, விரல் நெகமெல்லாம் வலிக்குது தேவா”
“அதுக்குத்தான் அப்பவே ஸாரி கேட்டாச்சே தாரா”
“அவ்ளோதானா?”
“சரி, சிங்கிள் கிஸ் ஆன் யுவர் பிங்கர் டிப். வலி எல்லாம் சரியாயிடும்” என்றான் சாதரணமாக!
“ம்ன்?!” என்று விழி விரிய திரையில் தெரிபவனைப் பார்த்தாள். அவளுடைய முகமாற்றத்தை மௌனமாக ரசித்தான்.
“என்ன சொன்னீங்க தேவா?”
“சிங்கிள் கிஸ் ஆன் யுவர் பிங்கர் டிப்” என்று சாவகாசமாகச் சொன்னான்.
“நான் கொடுத்துக்கவாங்க? ” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“நீங்க வேற! யாருக்காக டைப் பண்ணீங்களோ, அவங்கதான் கொடுக்கணும்”
“ஓ!”
“நாளைக்கு அவங்களைப் பார்த்தா மறக்காம கேளுங்க”
“கேட்கிறேன்ங்க. ஆனா அவங்க இதெல்லாம்… நம்பிக்கை இல்லைங்க”
“கேட்டுப் பார்த்தாதான தெரியும்”
இன்னும் பேசினார்கள்! காதலியாய் அவள் பேசினாள்! காதலனாய் அவன் பேசினான்!!
எவ்வளவு பேசுகிறான்? ஆனால், தான் நிரம்பத் தேவையான ஒரு வார்த்தை பேசுகிறானா?! – காதல் உண்டியல் is feeling disappointed with தேவா!!
“தூக்கம் வருது தேவா” என்று சொன்னாள் சற்று நேரம் பேசியபின்!
“எத்தனை நாள் கழிச்சுப் பேசறேன். ப்ளீஸ் தூங்காதீங்க”
“இத்தனை நாள் தூக்கமே வரல. இன்னைக்குத்தான் நிம்மதியா தூங்குவேன்”
“சரி. நாளைக்குப் பார்க்கலாம்”
“ம்ம்” என்று அலைபேசியை வைக்க போனவளிடம், “தாரா தாரா” என்றான்.
“ம்ம்ம் சொல்லுங்க”
“நானும் தாராவை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்”
“தெரியுது! அதானா இந்த நைட்ல ஃபோன் பண்ணிருக்கீங்க” என்றாள்!
சிரித்துக் கொண்டான். இருவரும் அழைப்பைத் துண்டித்துக் கொண்டனர்.
சிலுசிலுவென அடிக்கும் அஞ்சன நேர அலைகடல் காற்றை ஒருமுறை தாரா ஆழமாகச் சுவாசித்தாள். காட்சிப் பிழையாய் காதலன் தேவா தோற்றம் கண் முன்னே!
தாரா செவசெவ என்று சிவந்து போனாள்… தேவா சொல்லப் போகும் காதலை நினைத்து! ஆத்மார்த்தமாக ‘லவ் யூ தேவா’ என்று… ஆர்ப்பரிக்கும் ஆழியை நோக்கிச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள்.
தேவாவிடம்… ஏன்? எப்படி? இந்த மாற்றம்… அவளைப் பிடித்திருந்தது. அவனே அதைச் சொல்லியிருந்தான். ஆனால் காதல் எப்போது வந்தது? கொஞ்சம் கொஞ்சமாக தேவாவிற்குள் காதல் நுழைந்திருந்தது.
முதலில் தாரா காதல்தான் அவனுக்குப் பரிச்சியம். அதன் பின்னே அவள். எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தது. பின் ஈர்ப்பு வந்தது! அதுவும் அவளை வேண்டாம் என்று சொன்ன பிறகே!!
அலைபேசியில் பேசப் பேச, மனம் அவளைப் புரிய ஆரம்பித்தது! இடையில் பேசாமல் இருந்தால் மனம் அவளைப் பிரிய மறுத்தது!!
அதிலும் அந்த மழை நாளில் தாராவின் பேச்சில்… அவள் காதலில்… அதை வெளிப்படுத்திய விதத்தில்… அதன் ஆழத்தில்… தேவா விழுந்துவிட்டான்.
தனக்காக கண்ணீர் சிந்தியவளுக்காக மனம் கசிந்து உருகியது.’நீ என் முடிவு’ என்று சொன்ன பெண்தான், தன் காதலின் ஆரம்பம் என்று தெரிந்தது.
‘மறக்கவே முடியாது’ என்று சொன்னவளைத் தன்னால் மறக்க இயலாதென்று தோன்றியது. உன்னைக் கல்யாணம் செய்வதற்காக காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பவளைக் காதலிக்கத் தொடங்கினான்.
அதிலும் தாரா அன்று வந்து நின்றது, தனக்காக அவள் எல்லோரிடமும் பேச்சு கேட்பது, தன்னைவிடத் தன் கொள்கைகளைக் காதலிப்பது, இவைகள்தான் தேவா காதல் மேல் சாய்ந்திட… காதலை கையில் எடுத்திட காரணங்கள்!
ஆனால் இந்த ஏழு நாள் பிரிவு அவனுக்கு உணர்த்தியது வேறு! இது எதுவுமே இல்லை என்றாலும் தாராவைப் பிடிக்கும் என்பதே அது! இந்தப் பிரிவினால் மொத்தமாக தேவா காதல் மேல் சரிந்து விழுந்திருந்தான்! காதலின் கையில் தன்னைக் கொடுத்து விட்டான்!!
அவன் காதலிக்கிறான். காரணங்கள் ஏதுமின்றி தாராவைக் காதலிக்கிறான்!
அதுதானே காதல்! அவனுள் உதயமான காதலால்தான், இந்த அழைப்பு!
இணையத்தின் சேவை கிடைத்ததும்… தன் இதயத்தின் தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட மகிழ்ச்சியில் இருந்தான்! காதலி தாராவை நினைத்து… ‘லவ் யூ தாரா’ என்றான் தேவா ஆசையாக!
அடுத்த நாள்! நாள் நகர்வேனா என்றிருந்தது தாராவிற்கு! மதியம் இரண்டரை மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர். கடைசியில் நாள் நகர்ந்ததா, இல்லை அவள் நகர்த்தினாளோ… சந்திப்பு நேரம் வந்திருந்தது. அவன் சொன்ன காஃபி கேஃபேக்குச் சென்றாள்.
மேற்கூரையில் முழுவதும் சிறிய வட்ட வடிவ கண்ணாடிகள்! அவை சீரான இடைவெளியில் பதிக்கப்பட்டிருந்தன! அதன் வழி விழும் சூரிய வெளிச்சம்!
தரைத்தளம் முழுதும் செயற்கை பச்சை புற்தரை! அதில் அங்கங்கே சிறு சிறு விளக்குகள்!! தரைத்தளத்தை ஒட்டிப் போட்டிருந்த நாற்காலிகள்! அதற்கேற்ற உயரத்தில் கண்ணாடி மேசைகள்!!
கேஃபே சுவர் முழுவதும் காதல் வாசகங்கள்! கேஃபேவை சுற்றிக் காதலர்கள் வாசனைகள்!! ஒருமுறை அந்த இடம் முழுவதும் அவள் விழிகள் சுற்றி வந்து, தேவா இருக்கும் இடம் தெரிந்ததும் சொக்கி நின்றது.
அவளுக்கு முன்பே வந்திருக்கிறான் என்று தெரிந்ததும், ‘நாட் பேட்’ என்று அவனை நோக்கி நடந்தாள். அருகில் சென்றதும், “ஹாய்” என்றாள்.
“இவ்வளவு லேட்டா வர்றீங்க?”
“நான் எத்தனை நாளா வெயிட் பண்றேன்? இன்னைக்கு ஒரு நாள்தான நீங்க வெயிட் பண்றீங்க”
“பழிவாங்கிற நேரமா இது” என்றவன், “உட்காருங்க” என்றான்.
புடவையை லேசாக தூக்கி கொண்டு அமர்ந்து, ” ட்ரிப் எப்படி இருந்தது” என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் மெனக்கெடல் எடுத்து ஒப்பனை செய்திருந்த பாவையை பார்த்திருந்தான்.
“ட்ரிப் எப்படி இருந்தது தேவா?” என்றாள் அவன் பார்வையை படித்தபடியே!
நாவல் பழத்தின் உட்பகுதி நிறத்தில் வேலைப்பாடுகள் ஏதுமில்லா புடவை அணிந்திருந்த மங்கையை மறுமொழியின்று பார்த்திருந்தான்.
“என்ன அப்படிப் பார்க்கிறீங்க?”
“நேத்து ஃபோன்ல கோபமா பேசின பொண்ணுதானானு பார்த்தேன்” என்று காதல் பொய் கூறினான்.
“நான் ஸாரி கேட்டேன்ல தேவா”
“ஹே, எனக்கு அது பிடிச்சிருந்தது”
“எது, பிரைன் இருக்கான்னு கேட்டதா?” என்றதும், மென்முறுவல் புரிந்தான்.
மூளையைப் பற்றிய சந்தேக கேள்விக்கு முகம் முறுவல் காட்டுகிறதென்றால், அதெல்லாம் காதலின் முகவரிகள்!
“என்ன முடிவு எடுத்துருக்கீங்க?” என்று கேட்டாள். முடிவு தெரியும் என்றாலும், அவன் வாய் வார்த்தையாக, அதைக் கேட்க வஞ்சிக்கு ஒரு விருப்பம்.
“என் அண்ணிகிட்ட, நீங்க அன்னைக்கு சொன்னதைக் கொஞ்சம் மாத்தி சொல்லலாம்னு நினைக்கிறேன்”
“தேவா” என்றாள் எரிச்சலாய்!
“ஓகே, உங்க வீட்ல அலைன்ஸ் பார்க்க வேண்டாம்னு சொல்லிடுங்க”
“தேவா” என்றாள் கோபமாக!
“ஓகே ஓகே… இனி யாராவது… ” என்று தொடங்கும் போதே, “நீங்க சொல்லவே வேண்டாம்” என முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். சட்டென, “தாரா, எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான்.
அவன் சொன்ன வேகத்தில், அவள் திரும்பினாள். ‘நிஜமா?’ என்று ஒரு கேள்வி கேட்டு, அவள் விழிகள்… அவன் விழிகள் பார்த்து நின்றது! ‘நிஜம்தான்’ என்று தலையசைத்து, “தாராக்காக தாராவைப் பிடிச்சிருக்கு” என்றான்.
அவன் அப்படி உரைத்ததும்… அவள் உறைந்துவிட்டாள்! இதுதானே அவளது காதல் ஆசை!! எந்தக் காரணங்களின்றி தன்னை பிடிக்க வேண்டுமென்பது! இதோ பிடித்தாயிற்று!
தாராவின் ஒரு விழியிலிருந்து நீர் வழிந்து கன்னங்களில் உருண்டோடியது. சூழலை ஒருமுறைப் பார்த்துவிட்டு… அவள் கண்ணீரைத் துடைத்து, “அழக் கூடாது” என்றான்.
இதயத்தின் ஆசை நிறைவேறியதில், இன்னும் இமைகூட அசையாமல், எதிரே இருப்பவனைப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் கண்ணீர்… மீண்டும் மீண்டும் துடைத்தான்.
“தாரா”
“ம்” என்றாள் உயிர் வந்தவளாய்! விழிகளில் விருப்பங்கள் வைத்துக் கொண்டு, அவனைப் பார்த்தாள்.
விலையில்லாத காதலை விழிகளில் ஏந்திக் கொண்டிருப்பவளை, விலகிச் செல்லவே முடியாது என்ற ஒரு உணர்வு தேவாவிற்கு!
“ஏதாவது சொல்லுங்க தாரா?”
“ஹக் பண்ணனும் போல இருக்கு தேவா”
“ம்ம்ம் எனக்கும்தான்”
“நீங்க நேத்தே இதைப்பத்தி சொல்லிருக்கணும்!”
“எதைப் பத்தி? ஹக் பண்றதைப் பத்தியா?”
“தேவா” என்று அழுத்திச் சொன்னாள். பின் மேசையிலிருந்த டிஸ்ஸு பேப்பர் எடுத்து, “blush, மஸ்காரா அழிஞ்சிடுச்சோ” என்று கண்ணீரைத் துடைத்தாள்.
“அதை அழறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்”
“நீங்கதான் அழ வைச்சது”
“வேண்டாம்னு சொன்னாலும் அழறீங்க! வேணும்னு சொன்னாலும் அழறீங்க! ஒரு மனுஷன் வேற என்னதான் சொல்ல முடியும்?” என்றதும் சிரித்துவிட்டாள்.
பின், “இதுக்கு முன்னாடி நீங்க இப்படிப் பேசி கேட்டதே இல்ல?” என்றாள்.
“ப்ரோபோசனலா பேசிக் கேட்ருப்பீங்க. இது பெர்சனல் லைஃப். இப்படித்தான் பேசுவேன்”
“நான் உங்க பர்சனலா தேவா??”
“அஃப்கோர்ஸ்”
பின்னே ஒலித்துக் கொண்டிருந்த மேற்கத்திய இசையை ரசிப்பது போல், ஒளிவுமறைவாக ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தனர்!
“கிஃப்ட் எதுவும் இல்லையா தேவா?” என்றாள் ரசிப்பதை நிறுத்தி!
“ஓ ஸாரி தாரா! அத நான் யோசிக்கவே இல்ல”
“அட்லீஸ்ட் ஒரு சாக்லேட் பார் வாங்கியிருக்கலாம்”
“ஏன்?”
“ரெண்டு பேரும் ஒரு செல்ஃபி எடுத்து, கேரிங் ஹார்ட்ஸ் ஷேரிங் சாக்லேட்ஸ்னு டிவிட்டர்ல போட்ருப்பேன்”
சிரித்தான். பின் யோசித்தான். மேசையில் ஒரு சதுர வடிவ கிண்ணத்தில் sugar sachet வைக்கப்பட்டிருந்து. அதில் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டி, “ஒரு சின்ன ஸ்வீட்” என்றான்.
வாங்கிக் கொண்டாள். சக்கரையாய் காதல்! சக்கரையே காதல் பரிசு!
“காஃபி வாங்கிட்டு வர்றேன்” என்று எழப் போனவனை, “தேவா…” என்றாள்.
“ம்ம்ம் சொல்லுங்க?”
மௌனமாக இருந்தாள்.
“எதுனாலும் சொல்லுங்க தாரா. டு யூ மைன்ட்… அதெல்லாம் கேட்கனும்னு அவசியமே இல்லை”
“பிங்கர் டிப்ல இன்னும் பெயின் இருக்கு” என்று சொல்லிவிட்டு, ஒவ்வொரு புருவத்தையும் தனித்தனியே உயர்த்தினாள்!
“ஓ! சிங்கள் கிஸ் ஆன் யுவர் பிங்கர் டிப்” என்று அவளருகே நெருங்கி ரகசியமாக கேட்டான்.
“ய்யா ய்யா”
“இருங்க வர்றேன்” என்று எழப் போனவனிடம், “எங்க போறீங்க?” என்று கேட்டு நிறுத்தினாள்.
“ஃபர்ஸ்ட் ஒன் சிப் காஃபி! அப்புறம் பிங்கர் டிப். பட் கிஸ் கண்டிப்பா உண்டு” என்று ரகசிய குரலில் சொல்லிச் சென்றுவிட்டான். நடப்பதெல்லாம் கனவா, நனவா என்பது போல்… அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காதல்உண்டியல் நிரம்பி விட்டதா? இல்லை, நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஏனெனில் அள்ள அள்ள குறையாதது அல்லவா, அவர்கள் காதல்.! – Finally காதல் உண்டியல் is feeling love with தாரா and தேவா!
வாங்கிய காஃபி கோப்பையைக் கொண்டு வந்து, மேசைமீது வைத்தான். அவள் புறமாக ஒரு கோப்பையைத் தள்ளியவன், “ம்ம் குடிங்க” என்றான்.
அவளும் எடுத்துப் பருக ஆரம்பித்தாள். இரண்டு மூன்று மிடறுகள் விழுங்கிய பின், அவளை நோக்கிக் கரம் நீட்டினான். தயக்கங்கள் நிறைந்த காதலுடன் அவனைப் பார்த்தாள்.
‘கொடுத்திடு’ என்று கண்களால் காதல் பேசினான். தயக்கத்தை விட்டுவிட்டு, நீட்டிய அவன் கரத்தின் மீது, தன் கரம் வைத்தாள். முதலில் உள்ளங்கைக்குள் இருந்த அவள் கரத்திற்குச் சிறு அழுத்தம் தந்தான். பின்… மெதுவாக அவளது ஒற்றை விரலை மட்டும் பற்றினான்.
‘ஹே… ஆர் யூ கோயிங் டு கிஸ் மீ?’ என்ற கேள்வி தாரா மூளைக்குள் ஓடியது.
இன்னும் மெதுவாக அவள் கை விரலைத் தன்னை நோக்கி எடுத்து வந்தான்.
“தேவா வேண்டாம்” என்று தாரா சுற்றிலும் இருப்போரைப் பார்த்தாள்.
பற்றியிருந்த அவள் விரலைப் பிடித்த வண்ணம், ஒரு மிடறு தன் கோப்பைக் காஃபியை குடித்துவிட்டு… அவள் விரலைக் கொண்டு வந்து, கோப்பையில் அவன் இதழ் பதிந்த இடத்தில் வைத்தான்.
மீண்டுமொரு முறை இப்படியே!
பின் அவள் கரத்தை விட்டுவிட்டு காஃபியை பருகியவன், “வலி போயிருச்சா?”
என்றான். அமைதியாக இருந்தாள்.
“தாரா, வலி போயிருச்சா?”
“ம்ம்ம்” என்று தலையை அசைத்தாள்.
“இங்க இவ்வளவுதான் முடியும்” என்றான்.
மௌனமாக அவனை ரசித்துச் சிரித்தாள்.
கோப்பைக் காஃபிக்குள் கோடிக் காதலைக் காண்பித்தான். அந்தக் கோடி காதலை, கோப்பைக் காஃபியாய் பருக ஆரம்பித்தாள். ஒரு மிடறு காஃபி! ஒரு மிடறு காதல்!! இப்படித்தான் இருவரும் சற்று நேரம் இருந்தார்கள்!!
சில நிமிடங்கள் பின், “தாரா, சில விஷயம் பேசணும்” என்றான்.
“ம்ம்ம் சொல்லுங்க”
“ரெஜிஸ்டர் ஆபிஸ்லதான் மேரேஜ். எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க. அக்கா சந்தோசப்படுவா. பாபி… ம்ம்ம் கெஸ் பண்ணிருப்பான். வேற யாரும் இல்லை. உங்க வீட்ல?”
“நான் பேசி கன்வின்ஸ் பண்ணிருவேன்”
“அப்படினா கன்வின்ஸ் பண்ண வேண்டிய இடத்தில இருக்கீங்க. நானும் வந்து பேசவா? அது இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்ல?”
“இல்லை, நான் பார்த்துக்கிறேன்”
“இவ்வளவு சிம்பிள் மேரேஜ் ஒத்துப்பாங்களா?”
“நான் பேசறேன் தேவா”
“எல்லாரும் சம்மதிக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லைனா, நான் வந்து பேசுறேன். மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்”
“ம்ம்ம்” என்றாள்.
அவன் படபடவென்று பேசி முடித்த பின், அவள் முகம் கொஞ்சம் சுணங்கித் தெரிந்தது.
“இவ்ளோ நேரம் நல்லா இருந்தீங்க. வீடுனு சொன்னதும் இப்படி இருக்கிறீங்க?”
ஒரு புன்னகை தாராவிடம்!
“சரி, என்கிட்ட உங்களுக்கு எதும் எக்ஸ்பெக்டேஷன் இருக்கா” என்றான்.
“ம்ம் இருக்கு. மேரேஜ் முடிஞ்சதும், நான் உங்களை ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன். எந்தக் கேள்வியும் கேட்காம அங்க வரணும். அங்க வச்சி நிறைய உங்ககிட்ட பேசணும்”
“எப்பவும் பேசணும்னு சொல்வீங்களே, அதுவா?”
“ம்ம்ம்”
“ரொம்ப சிம்பிளா இருக்கு தாரா”
“இதுவே போதும். வேற எதும் உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன்”
“தாரா மாதிரி பொண்ணு என் லைஃப்ல… ம்ம்ம், சிம்ப்ளி நான் லக்கி” என்று சிலாகித்துச் சொன்னான்.
“நானும் லக்கிதான்”
அதன்பின்னும் நிறைய பேசினார்கள். காதல் பேசினார்கள்! காதலாய் பேசினார்கள்! காதலுக்காக பேசினார்கள்! காதலைப் பேசினார்கள்! காதலர்கள் பேசினார்கள்!!
சற்று நேரத்தில் அவள், “கிளம்பலாம் தேவா. லேட்டாகுது” என்றதும் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
**********
ராஜசேகர் வீடு.
வீட்டிற்கு வந்து இரவு உணவை முடித்தவள், அனைவரிடமும் பேச வேண்டும் என்றாள். வரவேற்பறையில் அமர்ந்தனர். திருமணம் பற்றிய தன் முடிவைக் கூறினாள் தாரா.
அனைவரிடமும் அமைதி. யார் யார் என்ன சொல்லப் போகிறார்களோ? என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்டிப்பாக அம்மா மறுப்பார். அம்மா மறுத்தால், சரத்தும் மறுப்பான். ஜெகனுக்கு தேவா ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’ என்பதில் உடன்பாடு இல்லை என்று தெரியும்.
ராஜசேகர்?? அவள் கருத்திலும், கவனத்திலும் என்றுமே அவர் வந்ததில்லை.

