Kathambari Novels
தன் முன் வந்து நின்றவனை, கீதா ஆச்சிரியமாகப் பார்த்தார்.
“என்ன தம்பி?”
“நீங்க அரசம்பாளையம்தான?” என்று சட்டென கேட்டான்.
“ம்ம்ம், ஏன் கேட்கிறீங்க?”
“நானும் அந்த ஊர்தான்”
“ஓ!”
“நான், அதிபன் ஐயாவோட ஃபாலோயர்”
“ஓகோ! ஆனா அவருக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு. அவரைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்”
“எனக்குத் தெரியும்… ஆனா இது வேற!”
கீதா, அவனைப் பார்த்துக் கொண்டே நின்றார்.
“இது… இது அவர் பத்தின விசயம் இல்ல. என்னைப் பத்தி… எனக்காக…” என்று பேசிவிட்டு, தொடராமல் நிறுத்தினான். தயங்கினான்! திணறினான்! எல்லாம் காதலுக்காக! தெளிவாய் யோசிப்பவனையும், வளமாய் யாசிக்க வைத்தது.
“முதல நீங்க யாரு?” என்றார் கீதா அசட்டையாக.
“நான் தேவா… பாலிசி அனலிஸ்ட் அன்ட் ஆக்டிவிஸ்ட்”
திக்கென்றது கீதாவிற்கு! ஜெகன் கூறிய தாராவின் காதலன் இவனே! ஆனால் அவளிடம் காதலை மறுத்தவன், ஏன் என் முன் வந்து நிற்கிறான்? கீதாவிற்குப் புரியவில்லை.
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” – தேவா.
“உங்களுக்கு நான் என்ன ஹெல்ப் பண்ண முடியும்”
“அது…” என்றவனுக்கு மீண்டும் தயக்கம்!
“எனக்கு லேட்டாகுது, கொஞ்சம் சீக்கிரமா சொல்றீங்களா?”
“இந்த மாதிரி விஷயத்துக்காக… ஒருத்தர்…” என்று மீண்டும் நிறுத்தினான்.
“ப்ச், சொல்லுங்க”
“ஐயா சாகிறப்போ நான்தான் கூட இருந்தேன்…”
“மறுபடியும் அவர் பேச்சு…” என்று கீதா எரிச்சலடைந்தார்.
“முழுசா கேளுங்க புரியும்”
“சரி சொல்லுங்க”
“அப்போ அவர்… அவர் பொண்ணைப் பத்திச் சொன்னாரு”
தாரா பற்றி இவனிடம் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று, கீதாவிற்கு அதிபன் மேல் கோபம் வந்தது.
“அமுதாக்கு என் மேல… என்… என்னய அமுதா பிடிக்கும்னு ஐயாகிட்ட சொல்லிருக்கா”
‘அமுதாவா’ என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டதால்… கீதா அவனுக்குப் பதில் சொல்லாமல் நின்றார்.
“ஆன்ட்டி”
“என்ன பேசறீங்க? அவர் சாகிறப்போ அவளுக்குப் பதினைஞ்சு வயசு…” என்று கீதா சிடுசிடுத்தார்.
தேவாவிற்கு ஒருமாதிரி ஆகிப் போயிற்று! ஒரு பெண் மீதுள்ள விருப்பத்தை அவள் அன்னையிடம் கூறிக் கொண்டிருப்பது கூச்சத்தைத் தந்தது. எனினும், “ப்ளீஸ் ப்ளீஸ் ஆன்ட்டி. இது நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது” என புரிய வைக்கப் பார்த்தான்.
“வேறென்ன?”
“அமுதா என்னை… என் எண்ணத்த சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்லிருக்கா”
இவனுக்குத் தாராதான் அமுதா என்று தெரியவில்லை. அது கீதாவிற்குத் தெரிந்தது.
“இது வேற… இது வேற” என்றவன் குரல் குறிலில் ஒலித்தது.
அமுதாவை விரும்பிக் கொண்டு இருப்பதால்தான், தாராவின் விருப்பத்தை நிராகரித்திருக்கிறான் என்று கீதாவிற்குப் புரிந்தது.
“நீங்க அமுதா கான்டேக்ட் டீடெயில்ஸ் கொடுக்க முடியுமா? நான் அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்”
“அதெப்படி முடியும்? அந்த வயசுல ஒரு வேகத்தில சொல்லிருப்பா”
“அதிபன் ஐயா பொண்ணு அப்படிச் சொல்ல மாட்டா”
“எப்ப அதிபனை டிவோர்ஸ் பண்ணேனோ, அப்பருந்து அவ என் பொண்ணு”
இதற்கு என்ன அர்த்தம் என தேவாவால் புரிந்து கொள்ள முடியவில்லை!
இதை அப்படியே விட்டுவிட முடியவில்லை. இவன் அமுதாவைத் தேடுகிறான் என்று புரிந்ததால், “நீங்க வேணா… உங்க கான்டேக்ட் டீடெயில்ஸ் கொடுங்க. நான்… நான் பேசிப் பார்க்கிறேன்” என்றார் கீதா.
“தேங்க்ஸ்” என்று அலைபேசி எண்ணைக் கொடுத்திவிட்டு, “நீங்க சென்னைல இருக்கீங்களா?” என்று கேட்டான்.
அழுத்தமான மௌனம் கீதாவிடம்! அதற்குமேல் அவன் துளைத்து கேள்விகள் கேட்கவில்லை. அவனுக்குத் தெரியும் இதுவே அதிகப்படி என்று!
“வர்றேன்” என்று கீதா கிளம்பிவிட்டார். மேலும், போகும் போதே தாராவை அலைபேசியில் அழைத்து… வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றார்.
மிகுந்த சந்தோசத்துடன், பாபி சொன்ன நகைக்கடை நோக்கி தேவா வந்து கொண்டிருந்ததான். அலைபேசி அழைப்பு வந்தது.
எடுத்ததும் எதிர்முனையில் ஏதோ கேட்கப்பட, “நீங்க, நாளைக்கு ஆஃபிஸ்ல வந்து பைவ் ஹண்ட்ரட் நோட்புக்ஸ் கொடுத்திடுங்க. ரிமைனிங் நோட்புக்ஸ், என் சைட்லருந்து கொடுத்துக்கிறேன்” என்றான்.
அதன்பின் சிலது பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். பேசிக் கொண்டே நகைக்கடை வந்தடைந்திருந்தான்.
வெளியே தாரா அமர்ந்திருந்ததைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். லேசாக எழுந்து கொள்ளுவது போல் உடல்மொழி தந்தாள். இருந்தும் அதைக் கண்டு கொள்ளாமல், அவன் உள்ளே சென்றுவிட்டான்.
அங்கே ஒரு இடத்தில் சாரு நகைகள் தேர்வு செய்து கொண்டிருந்தாள். பாபி, மற்றொரு பக்கத்தில் நின்றிருந்தான். தேவா, பாபி அருகில் சென்றான்.
“அப்பவே ஃபோன் பண்ண, இப்பதான் வர்ற?” – பாபி.
“ஒரு ஃபோன் கால் வந்தது” என்றவன், “ரெஜிஸ்டர் ஆஃபீஸ்லதான மேரேஜ், அப்புறம் என்ன ஜுவல்லரி ஷாப்?” என்றான்.
“ரிங் எக்ஸ்சேஞ் பண்ணலாம்னு ரெண்டு பேரோட விருப்பம், அதான்…”
“ஆனா சாருகூட இருக்காம, நீ ஏன் இங்க நிக்கிற?”
“அங்க ஏசி குளிர் அதிகமா இருக்கு. மாலிக்கு நல்லதில்லை”
“தாரா இருக்காங்களே… அவங்ககிட்ட கொடுத்திருக்கலாமே?”
“அவங்களுக்குப் பீவர்”
அக்கணம் தேவாவைப் பார்த்து சாரு கையசைத்தாள். தேவாவும் ஒரு சிறு புன்னகை மற்றும் கையசைப்பு செய்தான்.
“நீ, எவ்வளவு நேரம் இங்க இருப்ப?” – பாபி.
“நீங்க ரெண்டு பேரும் பர்சேஸ் பண்ணி முடிக்கிற வரைக்கும்”
“வேலை இல்லையா?”
“பார்த்துக்கலாம். இவளை கொடு. நான் வெளிய போய் வச்சிருக்கேன்” என்று, பாபியிடமிருந்து மாலியை வாங்கியவன், “சாரு… தனியா பர்சேஸ் பண்ணா நல்லா இருக்காது. இவ அழுதா, உங்களைக் கூப்பிடறேன்” என்றான்.
“ம்ம்ம் சரி” என்று பாபி சாருவை நோக்கிச் சென்றான்.
தேவா, மாலியைத் தூக்கி வருகையில் மோதிரங்கள் அடுக்கி வைக்கப்பட்ட மாதிரிகளைப் பார்த்தான். அதில் ஒரு மோதிரம், அவனைக் கவர்ந்தது.
மிகச் சிறிய சிவப்பு கற்களால், தமிழ் எழுத்து ‘அ’ பொறிக்கப்பட்ட மோதிரம் அது! பார்த்ததும் அமுதா ஞாபகம் வந்தது. வாங்கிவிட்டான்!!
வெளியே வந்தவன் தாராவைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் இம்முறை பார்க்க மட்டும் செய்யவில்லை. “தேவா” என்று அழைத்து, ‘இங்க உட்காருங்க’ என்று சைகையால் பக்கத்து இருக்கையைக் காட்டினாள்.
தேவாவும் வந்தமர்ந்தான். ஒரு காலைத் தூக்கி மற்றொரு கால் மீது போட்டு, மாலியை நன்றாக மடியில் படுக்க வைத்துக் கொண்டான். அதுவரை தாரா அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின், “ஸாரி” என்றாள்.
“எதுக்கு டாக்டர்?”
அவளது முகம் ஒருவித பிடித்தமின்மையைக் காட்டியது.
“இதுக்கும் டிஸ்டர்ப்பானா, என்னால ஒன்னும் பண்ண முடியாது”
ஒரு மௌனம் தாராவிடம்!
“என் ஸாரியை அக்ஸப்ட் பண்ணிக்கிட்டா, பேர் சொல்லிக் கூப்பிடறேன்”
“நீங்க எதுக்கு ஸாரி கேட்கணும்? தப்பு என் மேலதான?”
“புரியலை? என்ன தப்பு?”
“லவ் கன்ஃபார்ம் பண்ணாம, கிரான்ட் ப்ரோபோசல்! அது சரி கிடையாதுல. உங்களை அப்படி ஒரு சிச்சுவேஷன்ல நிறுத்தி வச்சதுக்கு ஸாரி”
“ஆனா ப்ரோபோசல்னா ‘வில் யூ மேரி மீ?’-னு கேட்கிறதுதான. மொத்தமா அது தப்புனு சொல்ல முடியாது” என்றவன், “ஆக்ச்சுவலி… அந்த அரேஞ்ச்மென்ட்ஸ் எனக்குப் பிடிச்சது” என்று தான் ரசித்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
“ரியலீ” என்றாள் ஆச்சரியத்துடன்!
“ம்ம்ம், அந்த சீரியல் லைட்ஸ்” என்றதும், தாராவின் இரு விழிகளில் ஓர் ஒளி!
“அந்த பலூன்ஸ்… ” என்றதும், தாராவின் பாரமான இதயம் பறந்தது.
“தென் வொயிட் டேபிள் செட்… அன்ட் ரெட் ரோஸ்” என்றதும், ரோஜா இதழ்கள் விரிந்தது போன்ற ஒரு புன்னகை தாராவிடம்!
“இதெல்லாம் பிடிச்சிருந்தது” என்று முடித்துவிட்டான்.
தாராவிற்கு… தான் ரசித்தவற்றை அவனும் ரசித்திருக்கிறான் என்ற ஒன்றே போதுமானதாக இருந்தது! “தேவா, நீங்க என்கிட்ட இவ்ளோ பேசுவீங்கன்னு நினைக்கலை” என்றாள்.
“முத நாளே உங்ககிட்ட எந்த தயக்கமும் இல்லாமதான் பேசினேன்”
“அப்புறம் என்னாச்சு?”
“உங்க இன்ட்ரெஸ்ட் புரிஞ்சது” என்று தன் விலகலின் காரணம் கூறினான்.
“இப்போ”
“என்னோட இன்ட்ரெஸ்ட் என்னன்னு உங்களுக்குத் தெரியும்ல. ஸோ… “
“எத்திக்??”
“ய்யா! ய்யா!! ஐ நோ வாட் இஸ் எத்திகல் அன்ட் வாட் இஸ் நாட்”
தான் பேசிய வசனத்தை அவன் பேசியதும், உதடுகளைக் கோணலாக்கித் தன் அவள் கண்டனத்தைத் பதிவு செய்தாள்.
“எனக்கும் நேத்து இப்படித்தான் இருந்தது” என்றான் தன் மென்னைகையை மெனக்கெடல் எடுத்து மறைத்துபடியே! அவளும் மெல்லச் சிரித்தாள்!
“எனிவே அந்த கிரான்ட் ப்ரோபோசல் செட்அப் பிடிச்சது. அதனால ஸாரிலாம் வேண்டாம்” என்றான்.
“பட், அன்னைக்கு அனாயிங்னு சொன்னீங்களே”
“அது அந்த பாட்டு தாரா! செட்டிங் இல்லை”
சற்றுநேரம் மௌனமான நேரச் செலவிடல்கள்!
பின், “தேவா, நீங்க அந்த பாட்டு ஃபுல்லா கேட்டிருக்கீங்களா?” என்றாள்.
“இல்லையே”
“ம், கேட்டா… இப்படிச் சொல்ல மாட்டிங்க. இப்ப கேட்கிறீங்களா?”
“இப்பவா?”
“ம்ம்ம்” என்றவள், டோட் பேக்கிலிருந்து செல்பேசி, செவிப்பேசி இரண்டையும் எடுத்தாள். செவிப்பேசியின் ஒரு முனையை அவனிடம் தந்தாள். இன்னொரு முனையைத் தன் காதில் வைக்கப் போகும் முன் யோசித்தவள்… அவனிடம், “தேவா, டூ யூ மைன்ட்?” என்று அதைக் காட்டிக் கேட்டாள்.
தேவா யோசித்தான்.
“வேண்டாம்னா விட்ருங்க. நோ வொரிஸ்”
“நோ, ஐ டோன்ட் மைன்ட்” என்றான்.
“மெனி(many) தேங்க்ஸ்” என்று புன்னகையுடன் செவிப்பேசியின் மற்றொரு முனையைக் காதில் வைத்தாள். “தேவா ரெடி, ஒன்… டூ… த்ரீ” என்று விரல்களால் எண்ணியபடி எண்களைச் சொல்லி, பாடலை ஓட விட்டாள்.
இருவரும், ‘த்ரீ லிட்டில் வேர்ட்ஸ்’ பாடலை, ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே அலைபேசியில்… வெவ்வேறு அலைவரிசையில் இயங்கும் ஓர் காதலுக்காக கேட்டனர்.
இச்சமயத்தில் இரண்டு விடயங்கள் நடந்தன.
ஒன்று…
தற்செயலாக வணிக வளாகத்தின் அந்தத் தளத்திற்கு வந்த மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர் தம்பதியினர் இந்தக் காட்சியைப் பார்த்தனர்
“பாஸ்கர்… அங்க பாருங்க! அது தேவாதான??”
“ஆமா! பட், கூட யாரோ ஒரு பொண்ணு இருக்கிறா?
“பாஸ்கர் அது டாக்டர் தாரா! அவாய்ட் பண்றேன்னு சொன்னான். பார்த்தா ப்ரண்ட்ஸ் ஆகிற மாதிரி தெரியுது. இல்லயா பாஸ்கர்?”
“எஸ்… யூ ஆர் கரெக்ட்” என்றார். மேலும் பேசியபடி அவர்களின் தேவைகளை வாங்க சென்றனர்.
இரண்டாவது…
நகைக்கடையிலிருந்து வெளி வந்த சாருவும் பாபியும்… இதைப் பார்த்தனர்.
“ஐயோ! என்ன நடக்குது இங்க?” என்று அதிர்ச்சியில் சத்தம் போட்ட சாருவை கைப்பிடித்து இழுத்து வந்தான் பாபி. காதலர்களிடமிருந்து சற்று தூரமாகக் கூட்டி வந்த பிறகே அவள் கையை விட்டான்.
“என்ன பாபி இதெல்லாம்? நேத்துதான அவ்ளோ அட்வைஸ் பண்ணேன்” என சாரு குதித்தாள்!
“உனக்கு ஒன்னு தெரியுமா? இதுபத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தாராகிட்ட சொன்னேன்”
‘அப்படியா?’ என்ற கேள்வியுடன் விழிகளை விரித்தாள். ‘அப்படித்தான்’ என்று அவன் தலையாட்டவும், “நான் போயி…” என்று மீண்டும் போகப் போனவளை, கைப்பிடித்து நிறுத்தினான்.
“விடு பாபி” என்றவளிடம், “தேவா… வேற ஒரு பொண்ண, லவ் பண்ற விஷயம் தாராவுக்குத் தெரியாதா சாரு?” என்று அழுத்திக் கேட்டான்.
“தெரியும்”
“தாரா யாரை லவ் பண்றாங்கன்னு தேவாவுக்குத் தெரியாதா?”
“தெரியும்”
“அப்புறமும் ஏன் ரெண்டு பேரும் இப்படி?”
“தெரியலயே பாபி! உனக்குத் தெரியுமா”
“எனக்கென்னமோ அவங்களுக்கே தெரியலைனு நினைக்கிறேன்”
“புரியற மாதிரி பேசு”
“எனக்குப் புரிஞ்சது ஒன்னுதான்”
“என்னது?”
“இனிமே இதுல நாம தலையிடக் கூடாது… சரியா?”
சரியென்று சொல்லாமல், “இன்னொரு தடவை தாராவை தேவா அழ வச்சா, தேவாவை நல்லா கேள்வி கேட்பேன்” என்றாள்.
“கேட்கனும்னா ரெண்டு பேரையும் கேளு. அதுதான் நியாயம்”
“லாயர்னு ஃப்ருவ் பண்ற”
“ஆமா” என்றவன், “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி சாரு? வா ஷாப்பிங் பண்ணலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.
மறுபடியும் பாடல் அலைவரிசைக்கு! சூழலில் நடப்பது எதுவும் தெரியாமல், காதலர்கள் தங்கள் காதல் உண்டியலை நிரப்பும் வேலையில் இருந்தனர்!!
பாட்டு முடிந்ததும் செவிப்பேசியை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி வைத்துக் கொண்டே, “இப்ப சொல்லுங்க எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“இப்பவும் சொல்றேன், அனாயிங்தான்! எனக்குப் பிடிக்கவேயில்ல”
“ஓ ஹோஷ்! நீங்க உங்க லவ்வரை நினைச்சிக்கிட்டே கேட்டுப்பாருங்க தேவா! கண்டிப்பா பிடிக்கும்”
“எப்படி தாரா? இந்த சாங் கேட்டா, உங்க ஞாபகம்தான் வரும்”
“அது சரிதான். அப்பா ஒன்னு பண்ணுங்க! உங்க லவ்வர்கிட்ட கேட்டு, ஒரு சாங் செலக்ட் பண்ணிக்கோங்க” என்றாள் சிரித்துக் கொண்டே!
“சீக்கிரமே. ரெண்டு மூனு நாள்ல… அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிடும்” என்றவன் குரலில் ஓர் நிம்மதி!
“ஒன் சைடு லவ்வா தேவா” என்று ஒருமாதிரி குரலில் கேட்டாள்.
“சஅப்படிலாம் இருக்காது. அவளுக்குக் கண்டிப்பா என்னய பிடிக்கும்” – பெரிய எதிர்பார்ப்புடன் சொன்னான்!
“ம்ம்ம்!” என்றவள் தொண்டை வலித்தது. “அவங்க ரொம்ப லக்கி இல்லையா தேவா?” என்றாள் ஏக்கமாக!
“இல்லை. நான்தான் லக்கி”
“எனக்கு உங்கள பத்தி தெரியும், அவங்கதான் லக்கி” என்றாள் விடாமல்!
“அவளைப் பத்தி எனக்குத் தெரியும். நான்தான் லக்கி” என்றான் விட்டுக் கொடுக்காமல்!!
“ஓகே, ஹார்ட்டி விஷ்ஷஸ்”
“எதுக்கு?”
“லவ் சக்சஸ் ஆக”
“திடீர்னு ஏன்?”
“ஏன்னா லவ் ஃபெயிலியர் வலி எனக்கு தெரியும்” என்றாள் கழுத்து நரம்புகள் புடைக்க! சாதரணமாக இருந்தாள். சட்டென்று சரிகின்றாள். இல்லை! அவன் காதலியைப் பற்றிய பேச்சுகள் அவளைச் சரியச் செய்தன.
இது தேவாவிற்குப் புரிந்தது! சிறு மௌனத்திற்குப் பின், “தாரா” என்றான்.
“ஐ அம் ஆல்ரைட்” என்றாள், தன்னைச் சமன் படுத்திக் கொண்டு!
“தாரா… நான் உங்களை அவாய்ட் பண்ணது தெரியவே இல்லயா?”
“ஏன் தெரியல? நல்லாவே தெரிஞ்சது”
“அப்புறம் ஏன்?”
“பிளைன்ட் ஹோப்”
“எல்லா விஷயத்திலயும் எவ்ளோ தெளிவா இருக்கீங்க… என்கிட்ட மட்டும் ஏன் இப்படி?” என்றதும், கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தபடி, “ஏன்னா, உங்ககிட்ட மனசிலிருந்து பேசுவேன்” என்றாள்.
“அப்ப என்கிட்ட பேசறப்ப மூளை யூஸ் பண்ண மாட்டிங்களா?” என்று சிரித்துக் கேட்டான்.
“அப்படியில்ல! நீங்க டவுனா இருந்தா கன்சோல் பண்றதுக்கு, நீங்க ஆர்க்யூ பண்ணா, நானும் ஆர்க்யூ பண்றதுக்கு… மூளையால யோசிப்பேன். அன்ட்… “
“அன்ட்” என்று சிலாகித்துப் போய் கேட்டான்.
“இது என் பெர்சனல் லைஃப்… ப்ரோபோஷனல் லைஃப் கிடையாது” என்றாள் அழகான புன்னகையுடன்!
“ஓ!”
“ஏன் தேவா, நீங்களும் அப்படித்தான? என்கிட்ட பேசற மாதிரி, உங்க வொர்க் ப்ளேஸ்ல” என்றவள் சட்டென நிறுத்திவிட்டாள்! அப்படியே நிறுத்திவிட்டாள்! புன்னகையைத் துடைத்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
“ஸாரி ஸாரி… ஸாரி தேவா”
“பரவால்ல விடுங்க”
“புரிஞ்சிடுச்சா”
“ம்ம்ம்! நானும் உங்களை லவ் பண்றதா நினைச்சி பேசறீங்க”
“ரியலி ஸாரி” என்றவளுக்கு, அதற்கு மேல் அவனைப் பார்க்க இயலவில்லை. வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். விழிகளில் உப்பு நீர்க் கரைசல் கசியப் பார்த்தது. உடனே அதை உள்ளத்துக்குள் இழுத்துக் கொண்டாள்!
அவளைப் பார்த்தபடி இருந்தவன், “என்னை மறக்க முடியாதா தாரா?” என்று உள்ளத்திலிருந்து கேட்டதும், அவன் விழி நோக்காமல், ‘முடியாது” என்று ஆழமான தலையசைப்பு அவளிடம்!
ஒழுங்காய் பேசும் அவள் உதடுகள் பேச்சை மட்டும் கேட்டவனால், ஓலமிடும் அவள் உள்ளத்தின் ஓசையையும் கேட்க முடிந்தது! ஓரிரு மௌன நொடிகளே போதுமானதாக இருந்தது தாரா தன்னைச் சரி செய்துகொண்டு, அவனைப் பார்ப்பதற்கு!
அவனும் பார்த்தான்! மீண்டும் அந்த நனைந்த இமைகள்! ஆனால் இம்முறை அவைகள்… அவளின் இஷ்டத்தை நோக்கி, அவன் இதயத்தை ஈர்ப்பது போல் தெரிந்தது.
சட்டென தன் முகத்தை, வேறுபக்கம் திருப்பிவிட்டான். அவளும்தான்!
எல்லை மீறிச் சென்றிட நினைக்கும் தன் ஒருதலைக் காதலை எண்ணி குற்ற உணர்வு வந்தது தாராவிற்கு! ஏற்கனவே ஒரு காதல் இருக்கையில், இது என்ன ஈர்ப்பு என்ற குற்றஉணர்வு தேவாவிற்கு!
அந்த நேரம், மாலி லேசாகச் சிணுங்கினாள். உடனே தாரா தன்னை மீட்டுக் கொண்டு மாலியைத் தட்டிக் கொடுத்தாள். தேவாவும் சுதாரித்துக் கொண்டு மாலியைப் பார்த்தான்.
மேலும், தட்டிக் கொடுக்கும் தாரா கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்தான். அவளைச் சமாதானப்படுத்த வேண்டி, “இதென்ன மோதிரம்… ரொம்ப பழைய டிசைனா இருக்கு” என்று சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தான்.
“பழசுதான்! ஆனா இதுக்குள்ள இருக்கிற விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் என்னோட இஷ்டம்”
“ஓ!” என்றவன், “நான்கூட, இப்ப ஒரு மோதிரம் வாங்கினேன்! பார்க்கிறீங்களா? வித்தியாசமான டிசைன்” என்று கேட்டான்.

