Kathambari Novels தலைமுறை தடுமாற்றம் சகிப்புத்தன்மையின் அளவுபதிவிறக்க காத்திருத்தலில்முடிவு செய்யப்படுகிறது… ஆரோக்கிய வாழ்வுஅட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்டதூளாக மாறியுள்ளது… விளையாட்டு மைதானம்கையளவு சுருங்கிய கைப்பேசியாககருதப்படுகிறது… நட்பின் அடையாளம்விருப்ப பொத்தானின் சொடுக்கலில்உணரப்படுகிறது… அழகின் இலக்கணம்உண்மை மறைக்கும் செயலியால்வரையறுக்கப்படுகிறது… தேவையின் மதீப்பீடுதான் சூழ்ந்தவரின் ஒப்பீட்டளவில்கணக்கிடப்படுகிறது…. கற்றவரின் அறிவுமென்பொருள் கையாளும் திறனாகபார்க்கப்படுகிறது… பிறரின் துன்பம் துடைப்புவலைதள பதிவின் பகிர்தலில்முடிந்துவிடுகிறது… தனிநபர் பாதுகாப்புகடவுச்சொல்லின் கட்டமைப்பில்கணிக்கப்படுகிறது… ஆகமொத்தத்தில் – நம்அகவுரிமை என்பதுஅண்டத்தின் மற்றோர் மூலையில்காட்சிப்பொருளாக!!!
தலைமுறை தடுமாற்றம் Read More »