சான் போலோ [ San Polo ] சிஸ்டியரி!

அளவில் மிகச் சிறிய சிஸ்டியரி இது!

நகரின் இரண்டாவது பெரிய சதுக்கத்தை முன்புறமாக கொண்ட இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீடு! அதன் பின்பகுதியில் அமைதியான கால்வாய் ஒன்றிருந்தது!

வீட்டின் அறைகள் அனைத்தும்… விசாலமானதாக, வெளிச்சம் நிறைந்ததாக, இருந்தது. விலையுயர்ந்த கலை பொருட்கள் வைக்கப்பட்டு, வேலைப்பாடுகள் அதிகமுள்ள வெல்வெட் மெது இருக்கைகள் மற்றும் பெரிய கம்பளங்கள் போடப்பட்டிருந்தன.

உட்கூரைகள் அகலமான, மிக நீளமான உத்திரங்களைத் தாங்கியிருந்தன. மரத்திலான அறைகலன்கள் மற்றும் கலைபொருட்கள், மின் சாதனங்கள் வீடெங்கும் நிரம்பியிருந்தன.

ஆடம்பர தளபாடங்கள், பளிங்கு தரைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாக கூற வேண்டுமானால், வீட்டில் வாழ்வோரின் செல்வ செழிப்பை எடுத்துரைக்கும் விதமாக ஏகப்பட்ட எழிலை உள்ளடக்கிய வீடு!!

கீழ்தளத்தில் இருந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்! அங்கிருந்தவர்களில் ஒருவன் பெயர் ரவி! அவனுக்கு அருகில் ஒரு பெண் இருந்தாள். இவள் ரவியின் மனைவி, பெயர் மது! மற்றொருவன் நின்று கொண்டிருந்தான்… வெனிஷியன் தோற்றத்தில் இருக்கும் இவன் ரவியின் நண்பன்!!

அவனது பெயர் டேவிட் ஃபெரோ [David Ferro]!!

அவ்வளவு நேரம் நண்பனுக்காக, அவனுடைய நலனுக்காக யோசித்து ரவியும் மதுவும் பேசியிருந்தார்கள். இவர்கள் இன்று மட்டும் இப்படிப் பேசவில்லை, சமீப காலமாகவே இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவனைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்.

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டேவிட்… பெரிய சன்னலுக்கு முன் சென்று, “தேர் இஸ் நோ க்யூர் ஃபார் சம் சேட்நெஸ் (சில கவலைக்கெல்லாம் மருந்தே கிடையாது) இது அப்படி ஒன்னுதான். என்னய இந்தக் கவலையோட இருக்க விடுங்க. இத க்யூர் பண்ணலாம் வேண்டாம்” என்றான் கண்ணீரைச் சுமக்கும் கண்களுடன்!!

Enjoyed this? Share it!

Leave Your Thoughts Here…

Scroll to Top